சூப்பர் நேப்பியர் (பேங்க்சோங் -1).
ஆசியாவில் உள்ள நேப்பியர் புல்களேயே அதிகமான புரத சத்து(16% முதல் 18%),அதிக மகசூல் கிடைக்கும் (200 டன் பசும் தீவனம்) இனமாகும். நாம்மிடம் தற்போது உள்ள கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது இதன் மகசூல், புரத சத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஏனைய பசுந்தீவனத்துடன் கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லை விவசாயம் செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 6 மாடுகளும், 20 ஆடுகளும் பராமரிக்க முடியும் என்றால், ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 12 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியும்.
சுருக்கமாக சொன்னால் கோ4,கோ5 நேப்பியர் புல்லை விட இரண்டு மடங்கு அனைத்து விதத்திலும் கூடுதலாக பலன் தரவல்லது. ஆனால் அதே அளவு நிலப்பரப்பு மற்றும் உழைப்பு மூலம். ஆகவே சூப்பர் நேப்பியர் புல் தமிழக மற்றும் இந்திய விவசாயிகளிடம் வரும் காலத்தில் மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது உறுதி. அதில் நாங்கள் முன்னோடியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
மேலும் விரிவான தரவுகளுடன் தொடர் கட்டுரையை காவேரி பண்ணையில் இருந்து, இனி வரும்காலத்தில் வெளிவரும். அதில் அனைத்து கோணத்திலும் நாம் இது சார்ந்து பேசலாம். தொடருவோம்….
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.