சூப்பர் நேப்பியர் சாகுபடி, அறுவடை, தீவனமாக வழங்கும் முறை.

Guide to Plant, Harvest and Feed the Super Napier in Tamil

கட்டுரை ஆசிரியர்: காவேரி பண்ணை , விருத்தாசலம்.

சூப்பர் நேப்பியர் (அ) Pakchong1 தீவனபுல்லின் சிறப்புகள்.

 

  • பெற்றோர் – கம்பு மற்றும் நேப்பியர் புல் (அ) யானைப் புல் இதன் அறிவியம் பெயர் Pennisetum purpureum.
  • அதிக புரதச் சத்து (14% முதல்18% வரை ) மற்றும் மிகஇனிப்பான தண்டுகளைக் கொண்டது , கரும்பு போல் இனிப்பாக இருக்கும்.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 180 முதல் 200 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது. ஆசியாவிலேயே அதிக மகசூல் தரும் நேப்பியர் புல் இனம்.
  • அதிக படியான இலை நீளம் (115 – 125 செ.மீ) மற்றும் அகலமுடைய (6 – 8 செ.மீ) இலைகளைக் கொண்டது.
  • அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
  • அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
  • அதிக இலை தண்டு விகிதம் .
  • தூர்கள் (25 – 30 குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
  • வருடத்திற்கு எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
  • குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.

 

வயது (அ) ஆயுட்காலம்: 8 ஆண்டுகள்.

 

தாங்கும் திறம்.

 

  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.

 

  • எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது. அதாவது அதைத்து வகையான காலநிலையிலும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

 

  • அனைத்து வகையான நீரிலும் வளரும் தன்மை கொண்டது, குறிப்பாக உவர்ப்பு தன்மை உள்ள நீரிலும் வளரும். உவர்ப்பு நீரில் அதன் மகசூல் குறையாது, ஆனால் புரதச்சத்து அளவு குறைகிறது.

 

பருவம்.

ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற புல் ரகம் இது.

 

மண் வகை.

அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். குறிப்பாக கடற்கரை மணலிம் விவசாயம் செய்த போது மகசூம் குறையவில்லை. புரதச்சத்து அளவு குறைந்தது.

நிலம் தயாரித்தல்.

இரும்பு கலப்பை பயன்படுத்தி இரண்டு முறை நன்கு ஆழமாக 0.5 முதல் 1 அடி (அ) 15 முதல் 30 செமி ஆழம் உழவு செய்தல் வேண்டும். இயந்திரம் மூலம் உழவுசெய்யும் போது பெரும்பாலும் 0.5 அடி ஆழம்வரை செய்யமுடியும், மாட்டின் மூலம் 1அடி ஆழம் வரை உழவு செய்யலாம்.   பின்பு சுழல் கலப்பை (அ) rotavator  கொண்டு ஒரு முறை உழவு செய்ய வேண்டும்,  பின்பு 3 அடி அ() 90 செமி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

 

super napier grass

 

 

ஊட்டசத்து கொடுக்கும் முறை.

ஒரு எக்கருக்கு 10 டன் அளவிற்கு தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.

இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்யும் போதுதான் நீண்டகாலத்திற்கு பலன்கொடுக்கும். மேலும் இதன் சிறப்பு தன்மையான அதிக விளைச்சல், அதிக புரதம், இனிப்பு ஆகியவை இயற்கை விவசாய முறையில்தான் மிக அதிகமாக கிடைக்கும்.  இது சார்ந்த விரிவான தனிக்கட்டுரை ஒன்று விரைவில் வெளியிடுகிறோம்.

 

பயிர் இடைவெளி.

90 செ.மீ * 60 செ.மீ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இக்காளொனியில் பார் அமைப்பின்  நிளம் , அகலம் எவ்வாறு அமைக்க வேண்டும் என்ற எளிய விளக்கத்துக்கு மட்டும் எடுக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 விதையளவு.

ஏக்கருக்கு 10,000 முதல் 12,000 இருபரு கரணைகள் தேவைப்படும்.

நடவு செய்தல்.

நீர் பாய்ச்சிய பின் கரணைகளை பார்களில் 60 செ.மீ இடைவெளியில் 1 குத்துக்கு ஒரு கரணை என்ற அளவில் 40’c சார்வாக நடவு செய்ய வேண்டும். விதைக் கரணையை நடும் போது மண்ணுடன் இறுக்கமாக இருக்கும்படி  மண்ணை இறுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் முளைப்பு திறன் அதிகரிக்கும். கலப்பு பயிராக 3 வரிசைகள் சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல்லும் ஒரு வரிசை வேலிமசாலும் கலந்து பயிர் செய்வதால் ஊட்டச்சத்தினை அதிகப்படுத்தலாம்.

களை எடுத்தல்.

30 நாட்களுக்குப் பின் களைகள் இருப்பின் ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் 45 நாட்களில் இரண்டாவது முறையாக களையை எடுக்கலாம். அதற்கு பிறகு சூப்பர் நேப்பியர் புல் மிக வேகமாகவும், அடர்த்தியாக வளருவதால் களைகள் முளைப்பதில்லை. 80 நாட்களுக்கு பிறகு முதல் அறுவடை முடிந்த பின் தேவைப்பட்டால் களை எடுக்கலாம். அதன் பிறகு களை எடுக்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் எழாது.

நீர் பாசனம்.

மூன்றாவது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் தன்மை மற்றும் கிடைக்கும் மழை அளவினைப் பொறுத்து 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். கழிவு நீரையும் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.

சூப்பர் நேப்பியர் அனைத்து வகையான நீரிலும் நன்கு வளருகிறது. குறிப்பான மேலே கூறியதுபோல் உவர்ப்பு தன்மை அதிகம் உள்ள நீரிலும் கூட மகசூல் குறையாமல் விளைகிறது. இயற்கையான பாசனம் உள்ள நிலத்தில் மகசூல் சிறப்பாக இருக்கும்.

மண் அணைத்தல்.

முதல் களை (30 நாட்கள்) எடுத்தப் பிறகு அல்லது இரண்டாவது களை (45 நாட்கள்) எடுத்த பிறகோ,  மண்ணின் தன்மைக்கு ஏற்ப களை வரும் அதை முழுமையாக எடுத்துவிட்டு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்துவிட்டு அணைக்க வேண்டும். பிறகு மூன்று அறுவடைக்கு (150 நாட்கள்) ஒரு முறை மண் அணைக்க வேண்டும்.

நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது.

சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல்லினை நோய்கள் தாக்குவதில்லை. ஆகையால் பயிர் பாதுகாப்பு தேவைப்படாது. அப்படி மிக அரிதாக ஏற்படும் பட்சத்தில் கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் கலந்த விசத்தை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது. இச்செயல் மிக ஆபத்தானது, ஏனெனில் தீவனப்பயிர் நச்சு கலந்து இருக்கும், அதை அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுப்பது இறப்பை ஏற்படுத்தும். இதற்கு மாற்று இயற்கை முறையிலான பூச்சுவிரட்டியே ஆகும்.

மேலும், இயற்கை முறையிலான பூச்சுவிரட்டி மற்றும் இயற்கை முறையிலான ஊட்டச்சத்து வழங்கும் அனைத்து வளர்ச்சி ஊக்கிகளையும் நாம் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பே இலைவழி ஊட்டமாக தொளிக்க வேண்டும். இல்லையேல் அதன் நெடி தீவனப்பயிரின் மேற்பரப்பிலும், உள்ளும் இருப்பதால் கால்நடைகள் விரும்பு உண்ணாது.

அறுவடை.

நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். மண், நீர் விவசாய முறையை பொருத்து 10 நாட்கள் கூடலாம் அல்லது குறையலாம். பிறகு ஒவ்வொரு 45 நாட்களுக்கு என ஆண்டுக்கு 8 அறுவடைகள் செய்யலாம். தீவனத்தை அறுக்கும் போது முடிந்த வரை நிலத்துடன் சேர்த்து அறுக்க வேண்டும்.

 

 

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தூர்களின் சுற்றளவை குறைத்து பாரின் அளவான 3*2 அடி என்பதை சரியாக பராமரிக்க வேண்டும்.

 

 

குறிப்புகள்:

1. இளம் கன்றுகளுக்கு சூப்பர் நேப்பியரை மட்டும் முழுமையான உணவாக நாள் முழுக்க கொடுக்க வேண்டும். இதன் தண்டுப்பகுதியில் உள்ள சக்கரையின் அளவும், நீர் அளவும் செரிமானத்தில் சிக்கல் செய்துவிடும். கன்றின் கழிச்சல் போகும். எச்சரிக்கை. இதை தவிர்க்க ஏனைய பயறு மற்றும் மர வகை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம்.

  1. நீண்ட கால அடிப்படையில் இயற்கையான முறையில் விவசாயம் செய்தால் 8 ஆண்டுகாலம் சிறப்பான மகசூல் மற்றும் புரதச்சத்து தக்கவைக்கலாம். வேதிப்பொருட்களை சத்தாக தொடர்ந்து வழங்கும் போது ஆயுட்காலம் குறைந்து, ஒரு சில ஆண்டுகளில் மகசூல் அளவும், புரதச்சத்தின் அளவும் குறைகிறது.

 

கட்டுரையாளர் : – காவேரி பண்ணை, விருத்தாசலம், செல்: 9488932336 (வாட்சப்), 7639444670.

14 thoughts on “சூப்பர் நேப்பியர் சாகுபடி, அறுவடை, தீவனமாக வழங்கும் முறை.

  1. Very detailed information with diagrams were self explanatory. In the first point in NOTE. I think some word is missing that gives a wrong message. kindly look in to it. Thank you..

  2. ஐயா வணக்கம்,

    எனக்கு ஒரு சந்தேகம்… சூப்பர் நேப்பியர் ஒரு ஏக்கருக்கு பயிரிட்டால் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்யப்பட வேண்டும் என்று அறிந்தேன்.

    ஒரு ஏக்கருக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை RAIN GUN முறை என்றால் எவ்வளவு தண்ணீர் ( லிட்டர் அளவில் ) எவ்வளவு நீர் செலவாகும்

    கேட்பதன் காரணம் சிறிய அளவில் செய்தால் பெரிய அளவில் செய்யும் போது சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு அதானால் தண்ணீர் வசதி குறைவான எங்கள் பகுதியில் முயற்ச்சி செய்ய தயக்கம்,
    தயவு கூர்ந்து சரியான அளவீடாக இல்லை என்றாலும் குத்து மதிப்பாக ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் வேண்டும் என்பதை சொல்ல முடியுமா ?

  3. நான் கும்பகோணம் ரயில் மூலம் பார்சல் அனுப்ப முடியுமா 1500 கடைகள் வேண்டும் எவ்வளவு தொகை ஆகும் 9787394487

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *